சேலம்: காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி, வீடியோ எடுத்து, அதைக்காட்டி, அந்த இளம்பெண் தொடர்ந்து, பாலியல் வன்புணர்வு செய்து வந்த இரண்டு சிறை வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலியே பயிரை மேய்ந்த இந்த சம்பவம் சேலத்தில் அரங்கேறி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 11 மணி அளவில் சேலம் மத்திய சிறைச்சாலை முன்பு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக ரோந்து போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அவர், தன்னை சிறையில் பணியாற்றும் வார்டன் ஒருவர் தன்னை காதலிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் விசாரித்தபோது, அந்த இளம்பெண் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். தன்னை காதலிப்பதாக கூறி, தன்னை வன்புணர்வு செய்து, ஆபாசம் படும் எடுத்து வைத்துக்கொண்டு, தொடர்ந்து இரண்டு வார்டன்கள் தன்னை பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறினார்.
இதையடுத்து, அந்த இளம்பெண் வீட்டுக்கு அனுப்பி வைத்த ரோந்து போலீசார், காலையில் காவல்நிலையம் வந்து புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து, அந்த இளம்பெண் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகார் மனுவில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சேலம் சிறை முன்பாக நின்றிருந்தபோது வார்டன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது என்றும் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , வாட்ஸ் அப் மூலம் நட்பாக பழகி வந்த நிலையில் அந்த வார்டன் திடீரென ஒரு நாள் தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். அங்கு காதலிப்பதாக ஆசை வார்த்த கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்தார்.
அவருடன் சேர்ந்து மற்றொரு வார்டனும் சேர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டார். என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர்’ வீடியோவாக பதிவு செய்து கொண்டு, அந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டு மிரட்டி அடிக்கடி உல்லாசத்திற்கு அழைக்கின்றனர். எனவே அவர்களை கைது செய்து, ஆபாசமாக எடுத்த வீடியோ காட்சிகளை அழிக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
இப்புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், இளம்பெண்ணை சிறை குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தது, சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் வார்டன்களான அருண் (30), சிவசங்கர் (31) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அதில், கடந்த 7 மாதத்திற்கு முன் சிறையின் முன் அந்த இளம்பெண் நின்றிருந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த வார்டன்கள் அருண், சிவசங்கரிடம் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல எந்த பஸ்சில் ஏறிச் செல்ல வேண்டும் என அப்பெண் கேட்டுள்ளார். அதற்கு அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறியிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் இளம்பெண் கொஞ்சி பேசியதால், அவருடன் வார்டன்கள் இருவரும் நெருங்கி பேசியுள்ளனர். பிறகு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பழகி அடிக்கடி சிறை குடியிருப்பில் காலியாக உள்ள வீட்டிற்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வந்த சிறை வார்டன்கள் அருண், சிவசங்கர் ஆகியோரை கைது செய்த அஸ்தம்பட்டி போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இளம்பெண் ஒருவரிடம் பேஸ்புக் மூலம் பழகி அவரை தனியாக அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்ட சேலம் மத்திய சிறைச்சாலை வார்டன்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலியே பயிரை மேயும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.