சென்னை: தமிழக சட்டபேரவை 2வது நாள் கூட்டம் தொடங்கியது. இன்றைய தொடரில் மறைந்த திருமகன் ஈவேரா உள்பட தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு சபை இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. , தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு, ஆளுநர் சில வார்த்தைகளை தவிர்த்து, தன்னிச்சையாக உரையாற்றியது போன்ற விவகாரங்களால் நேற்றைய சபை சலசலப்புடன் முடிவடைந்தது,.
இதையடுத்து இன்று 2வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரபலமானோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
அதன்படி, தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், அவ்வை நடராஜன், ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே, எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோரின் மறைவு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நாளை, 11-ந்தேதி (நாளை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழிய பெற்று எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும். 12-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடரும். 13-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதல்-அமைச்சர் பதில் அளித்து பேசுவார். பின்னர் அவசர சட்டம் தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட சில சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.