ஈரோடு: மறைந்த திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈவேரா எம்எல்ஏ நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது (46) . எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் புறப்பட்டு ஈரோடு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமகன் ஈவெரா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, முத்துசாமி உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இவிகேஎஸ் இளங்கோவன் உள்பட அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மறைந்த திருமகன் ஈவெரா உடல் இன்று கருங்கல் பாளையத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.