சென்னை: பாமக இளைஞர் அணி தலைவராக இருந்த, பாமக எம்எல்ஏ ஜிகே மணியின் மகனான ஜிகேஎம் குமரன், கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.
மத்திய அமைச்சர், நாடாளுமன்ற என பல பதவிகளை வகித்த அன்புமணி ராமதாஸ், கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இவர் பாமக கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவி, ஜிகேஎம் குமரனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் கடந்த அக்டோபர் மாதம் 25ந்தேதி அன்று நிகழ்ந்தது.
தனது மகனும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வரும், லைகா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜிகேஎம் தமிழ்க்குமரனுக்கு பதவியை ராமதாஸ் மூலம் பெற்று விட்டார். அன்புமணிக்காக தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார் என்பதற்காக அவரது மகனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜிகே மணியின் விசுவாத்துக்காக, அவரது மகனுக்கு பதவி வழங்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. மேலும், ஜிகேஎம் குமரன், லைகா நிறுவனத்தில் பணியாற்றி வருவதால், கட்சியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்தது.
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. 2022ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்: 2023ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில், புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, பட்டானூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் பிரமண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-க்கு ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுக்குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குமரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு, வணக்கம். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் பொறுப்பை தாங்களே விரும்பி எனக்கு நியமனக் கடிதம் வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.