சென்னை: தமிழ்நாட்டில் 2 டிஜிபிக்கள் உட்பட 20 ஐபிஎஸ் அதிகாரிகள்பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் புதிய டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஏடிஜிபி வெங்கட்ராமன், கூடுதல் பொறுப்பாக காவல்துறை நிர்வாகப் பிரிவை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியம்மாள்,
காவல்துறை பொதுப்பிரிவு ஐஜியாக செந்தில்குமார்,
சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக பிரபாகரன்
கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக கயல்விழி ,
நீலகிரி மாவட்ட எஸ்பியாக பிரபாகர்,
தென்காசி மாவட்ட எஸ்பியாக செந்தில்குமார்,
நாமக்கல் மாவட்ட எஸ்பியாக கலைச்செல்வன்,
தருமபுரி மாவட்ட எஸ்பியாக ஸ்டீபன் ஜேசுபாதம்
தஞ்சை மாவட்ட எஸ்பியாக முத்தரசி,
ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக ஜெயலட்சுமி
தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு ஏஐஜியாக உமா,
சிபிசிஐடி எஸ்பியாக ரவாளி பிரியா
உளவுத்துறை சிறப்புப்பிரிவு எஸ்பியாக அருளரசு
ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.