மேஷம்
சட்டென்று அவசரமாக முடிவுகள் எடுக்க வேணாங்க. குறிப்பாக வீடு வாங்குவது.. கல்யாணம் போன்ற பெரிய விஷயங்களில் யோசனையுடன் செயல்படுங்க. நன்மை கருதுபவர்களின் அட்வைஸ் கேளுங்க. பணிகள் அதிகமாக் காணப்படும். ஒங்களோட இலக்குகளை நீங்க அடைவீங்க. முக்கியமான முடிவுகள் எடுக்க இது உகந்த வாரம். பல காலம் நீங்க அனுபவிச்சுக்கிட்டிருந்த பிரச்னைங்க ஒவ்வொண்ணா விலகி மனசுல சந்தோஷமும் உற்சாகமும் அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் ஏராளமான நன்மைகள் செய்வாங்க. பகைவர்கள் மனசு மாறி உங்க அருமை உணர்ந்து மனசார மன்னிப்புக் கேட்பாங்க. தாராளமாக மன்னிக்கலாம். நம்பி ஏற்கலாம்ங்க. கொஞ்சம் ஆரோக்யம் கண்ணாமூச்சி காட்டும். கவனமாயிருங்க. பெரிசாய் சர்ஜரி அது இதுன்ன ஆகாது.. பயம் வேண்டாம். நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிடும்படியாக வரலாம்.
ரிஷபம்
ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்களும் வருமானங்களும் கிடைக்கும். ஆனால் அதை வகையாக எப்படி எங்கே இன்வெஸ்ட் செய்வது என்று உங்களின் நலம் விரும்பும் பெரியோரின் ஆலோசனை கேட்டு முடிவு செய்ங்க. ஸ்டூடன்ட்ஸ் பெருமைப்படும்படியான சம்பவங்கள் நடக்கும். புகழும் பெருமையும் வெற்றியும் அடைவீங்க. நீங்களே எதிர்பார்க்காத அளவு பொறுமையும் பக்குவமும் வந்திருக்குமே. ஆனால் அது விரக்தியா மாறாமல் பார்த்துக்குங்க. குறிப்பாய்க் காதல் விவகாரங்களில் சில சறுக்கல்களும் ஏமாற்றங்களும் ஏற்படாதபடி பேசிப்பழகுங்க. உங்க குழந்தைங்க ஆபீஸ்ல வெற்றி பெற்று அவார்ட் ரிவார்ட் வாங்குவாங்க. அம்மாவுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். அம்மா வழி உறவினர்களைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தும்படியான விசேஷங்கள் நிகழும். மனசுவிட்டுப் பேசும் நல்லவங்களைச் சந்திப்பீங்க.
சந்திராஷ்டமம் : டிசம்பர் 23 முதல் டிசம்பர் 25 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் அதிகக் கவனமாய் இருங்கள்.
மிதுனம்
அடேயப்பா.. எத்தனை விதமான வரும்படிகள்.. லாபங்கள்.. நன்மைகள்… மகிழ்ச்சிகள்? என்றைக்கோ கொடுத்த கடன்கள் நீங்க கேட்காமலேயே உங்க வீட்டு வாசல்ல வந்து காலிங்பெல் அடிக்கும். ஒங்களோட அஃபிஷியல் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இலக்குகளை அடைவதற்கான தன்னம்பிக்கை உங்க கிட்ட நிறைஞ்சு காணப்படும். அப்பாவின் விருப்பம் ஒண்ணு நிறைவேறும். ஃபாரின்லேந்து வரும்படி வருங்க. மனம் நிறைந்த மண வாழ்வு அமையும். நீங்க எதிர்பார்த்ததெல்லாம் நல்லபடியா நிறைவேறும். குழந்தைங்களைப் பற்றி இருந்து வந்த டென்ஷன்கள் அகலும். வெடுக்கென்று பேசி மத்தவங்க மனசைப் புண்படுத்திடாதீங்க. அவங்க பெரிசா ரியாக்ட் செய்துட மாட்டாங்க. பிரச்சினையோ சண்டையோ வராதுதான். ஆனா நீங்க நினைச்சு நினைச்சு வருத்தப்படக்கூடாதில்லையா
சந்திராஷ்டமம் : டிசம்பர் 25 முதல் டிசம்பர் 27 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் அதிகக் கவனமாய் இருங்கள்.
கடகம்
நீங்க விரும்பிய விஷயங்கள் நடக்கலைன்னு எரிச்சல்ல இருந்தீங்க. வெயிட்டீஸ். நீங்களே எதிர்பார்க்காதபடி நீங்க விரும்பிய திருப்பங்கள் உங்களுக்கே தெரியாதபடி நடந்துக்கிட்டிருக்கு. குல தெய்வத்தை வணங்குங்க. அவங்க அரசாங்க உத்யோகத்தில் இருக்கறவங்க என்றால் அவங்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். பல விதமான கல்விகளில் உங்களை ஈடுபடுத்திப்பீங்க. இப்போது ஈடுபடும் தேர்வுகள் அனைத்திலும் நல்ல ரிசல்ட் உறுதியா வருங்க. சகோதர சகோதரிங்க கிட்ட சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் அட்ஜஸ்ட் ஆயிடும். அவங்களுக்கு உங்க உதவி தேவையா இருக்கும். ஜமாய்ச்சு நல்ல பெயர் எடுத்துடுவீங்க. மனசுல கற்பனையான பயம் உண்டாகும். அது அவசியமில்லீங்க. வேலையில் இருந்த பிரச்சனைங்க முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சுல நிதானம் கண்டிப்பா வேணுங்க.
சந்திராஷ்டமம் : டிசம்பர் 27 முதல் டிசம்பர் 29 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் அதிகக் கவனமாய் இருங்கள்.
சிம்மம்
சகோதர சகோதரிகள் ஒரு நாளைக்கு நடந்துக்கிட்டா மாதிரி மறு நாள் நடந்துக்க மாட்டாங்க. கவனமா இருங்க. ஆனாலும் நீங்க நீங்களாவே இருங்க. உணர்வாங்க. சின்னச்சின்ன உடல் உபாதைகள் ஏற்படும். மெல்லமெல்லத்தான் சரியாகும். செலவுகள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். எல்லாத்தையும் கவனமாய்த் திட்டமிட்டுத்தான் செய்யறீங்க. எதிலுமே அவசரம் வேண்டாம். பேச்சினால் நன்மைகள் உண்டாகும். மகிழ்ச்சிகரமாக வாரமா இருக்கும். ஒங்களோட செயல்களை கவனமாக ஆற்றுவீங்க. ஒங்களோட நண்பர்களின் ஆதரவைப் பெறுவீங்க. இந்த வாரத்தை நல்லாப் பயன்படுத்திக்குங்க. நடுவுல கொஞ்சம் உடம்பு சரியில்லாம போனபோது மனசளவுல டவுன் ஆயிட்டீங்க. ஒய்? அதெல்லாம் கடந்து செல்லும் மேகம் மாதிரிங்க. அவசரப்பட்டு வாக்கு குடுத்து மாட்டிக்க வேணாம். உங்க ஸ்பெஷாலிட்டியே கவலையிலிருந்து மீண்டு சிங்கம் மாதிரி எழுந்திருப்பதுதானேங்க
கன்னி
குடும்பத்துல உள்ளவங்களோட பேசும் போது நிதானம் தேவைங்க. உடன் பிறந்தவங்களோட தற்காலிகமா விட்டுக்குடுத்துப் போங்க. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் இன்வெஸ்ட் செய்ய வேணாம். கணவருக்கு அல்லது மனைவிக்கு ஒரு குட் நியூஸ் உண்டு. அவசரப்பட்டு எநத வெற்றியையும் பறைசாற்றிப் பெருமை பேசிடாதீங்க. கவனமா இருங்க. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தடைகளை தாண்டி சாதிப்பீங்க. பண வருமானம் கூடும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்னை தீரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். வண்டி வாகனம் எதுவும் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் ஒத்திப்போடவும். மனசில் தெளிவு பிறக்கும். இந்த வாரம் உத்தியோகத்துல இருந்த பிரச்னைகள் நீங்கும். நல்லவங்க உதவி தன்னால கெடைக்கும்.
துலாம்
கண் டெஸ்ட் செய்யணும்னா கண்டிப்பா செய்துக்குங்க. சுத்தமும் சுகாதாரமுமாய் உடம்பை வைச்சுக்குங்க. பெண்களுக்கு மாதாந்திரப் பிரச்சினை சம்பந்தமான சின்ன சின்ன உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஆனாலும் நீடித்த பிரச்சினையாய் எந்த ஆரோக்யக் குறைபாடுமே இருக்காது. ஒங்களோட கணவரின்/ மனைவியின் புத்திசாலித்தனம் காரணமாக அவருக்கு அலுவலகத்தில் புகழும் உங்களுக்குக் குடும்ப சர்க்கிளில் நன்மைகளும் உண்டு. அவசியமே இல்லாமல் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக்காதீங்கங்கப்பா. நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்க. உண்மையில் உங்களால சாத்தியமான ஈஸியான விஷயங்களைக்கூடப் பார்த்து எதுக்காக பயந்து ஒதுங்கி உங்களால முடியாதுன்னு நெனைக்கறீங்க? புதுசா ஒரு பதவி தேடி வரும். நல்லவங்களையும் அல்லாதவங்களையும் இனம் கண்டுப்பீங்க.
விருச்சிகம்
புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. காதலிக்கறவங்க பாதுகாப்பா விழிப்புணர்வோட இருக்க வேண்டியிருக்கும். பிள்ளைங்களால ஏற்பட்ட மன உளைச்சல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாப் பேசிப் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யுங்க. வண்டி வாகனங்களில் போற போது கவனமும் நிதானமும் தேவை. ஸ்டூடன்ட்ஸ் புதிய கல்வியை தேர்வு செய்யறதுக்கு முன்பாக பெற்றோர், ஆசிரியர்களை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிச்சு முடிவு செய்ங்க. லேடீஸ்க்குக் குடும்பத்தில் சுப விரயம் ஒன்று வரும். பட் டோன்ட் ஒர்ரி அபவுட் இட். திருமணம் மாதிரியான சுப காரியம் தொடர்பாக பேசும் போது யோசித்து பேசுங்க. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தனுசு
சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஹாப்பியா முடியும். வீண் செலவுகள் அதிகரிக்கும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மன சஞ்சலங்கள் நீங்கும். பிள்ளைங்க வழியில நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் அதிகரிக்கும். ஆபீஸ்ல உயரதிகாரிகளின் ஆதரவு கெடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் அன்னியோன்யமும் கூடும். யாரிடம் பேசும்போதும் ஜாக்கிரதையோ ஜாக்கிரதையா இருங்க. திடீர் திருப்பங்களும் எதிர்பாராத பண வரவும் வரும். வேலையில் உங்களுடைய பொறுப்பை தட்டிக் கழிக்காம கவனத்தோடயும் விழிப்புணர்வோடயும் இருப்பதும் அவசியம். ரிலேடிவ்ஸ் கூட சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம் கோபத்தைக் குறைச்சுக்கிட்டு நிதானமாப் பேசுங்க. குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும். ப்ளீஸ். யூ மஸ்ட்.
மகரம்
ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாக பாஸிபிலிட்டி இருக்கு. தனியார் துறையில் வேலை செய்யறவங்களுக்கு வேலையில் திடீர் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கெடைக்கும். தொழில் வியாபாரம் திடீர் லாபம் தரும். வீடு மனை வாங்கற யோகம் வரும், புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. நீங்க நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நியூஸ் வந்து சேரும் பேச்சில் இனிமை கூடும். வெளியூர் செல்வதற்கான சான்ஸ் வரும். உடன் பிறந்தவங்களோட உதவி கெடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். உற்சாகமான வாரமா இருக்கும். ஆனா எதுவுமே கடகடன்னு நடந்து முடிஞ்சுடாதுங்க. முயற்சியைக் கூட்டுவீங்க. வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தொழில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். திருமண அல்லது அதற்கு இணையான சுப காரியம் தொடர்பாகப் பேசலாம்.
கும்பம்
கொஞ்சம் அதிகமா விழிப்புணர்வு தேவை. ப்ளீ’ஸ். பி கேர்ஃபுல். வாழ்க்கைத் துணையால முன் எப்பவோ ஏற்பட்ட ப்ராப்ளம்ஸ் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்துல உயரதிகாரிகளோட ஆதரவு கெடைக்கும். வேகமான செயல்பாடுகளைக் குறைச்சுக்குங்க. எந்த செயலையும் செய்யறதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசித்து செய்யறது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்துப் போவீங்க. இதனால வீட்டில் நிம்மதி ஏற்படும். தேவை அறிந்து பேசுங்க. அநாவசிய பேச்சுக்களை தவிர்த்துடுங்க. ப்ளீஸ் அவாய்ட் இட். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரத் தொனி வராம கேர்ஃபுல்லாப் பேசுங்க. குடும்பத்துல இருந்த டென்ஷன்ஸும் குழப்பங்களும் ஓடியே போயிடும். ஹப்பாடான்னு ஹாப்பி ஆவீங்க.
மீனம்
இளைய சகோதர சகோதரிகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வார இறுதியில பேச்சில் தெளிவு பிறக்கும். உங்க மேல மத்தவங்களுக்கு உள்ள மதிப்பு மரியாதை கூடும். முயற்சிகளில் வெற்றி கெடைக்கும். சுப செலவுகளும் வரும் மனதிற்கு சந்தோஷத்தை தரக்கூடிய வாரமாக அமைஞ்சாச்சுங்க. ஹாப்பி. ஹாப்பி. வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கெடைக்கும், ஆபீஸ்ல அதிகாரிங்களோட ஒத்துழைப்பு கெடைக்கும். உங்க புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சில் சூட்டை குறைத்து கோபத்தை கட்டுப்படுத்தி ஜெயிச்சுடுவீங்க. பேரன்ட்ஸ் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயம் குறையும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். இந்த வாரத்துல நடக்கற நிகழ்ச்சிங்க குதூகலத்தைக் குடுக்கும். செய்யும் செயல்கள் யாவும் சிறப்படையும், தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு ஏத்த மாதிரியான ஆதாயம் கெடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைங்க நீங்கும்.