நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்க ஒருலட்சத்து எட்டு வடைகளைக் கொண்டை வடை மாலை அணிவிக்கும் வகையில்,  கோவிலில் வடை சுடும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல், நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரசித்தி பெற்ற நாமக்கல்  ஆஞ்சநேயர் கோவில்  கோட்டை சாலையில் அமைந்துள்ளது.  இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அதாவது, மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன

அனுமன் ஜெயந்தி விழா நாளன்று சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்படும்.  அந்த வகையில் இந்தாண்டு வருகிற 23ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்றைய தினம்  அதிகாலை 5  மணிக்கு சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட உள்ளது. இதற்காக  1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி கோவில் மண்டபத்தில்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள் வடைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வடை தயாரிக்கும் பணி 3 நாட்கள் நடைபெறும் என்றும் அதன்பின்னர் வடை மாலை கோர்க்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.