சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள நிலையில்,  சிமென்ட் விலை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டதன் எதிரொலியாக, அடுத்த நாளே,  பாஜக ஆதரவாளரும், மற்றும் பிரதமர் மோடியின் நண்பரான அதானி, இமாச்சலில் செயல்பட்டு வந்த தனது இரு சிமென்ட் ஆலைகளையும் மூடுவதாக அறிவித்து உள்ளார்.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.  “இமாச்சல பிரதேச புதிய முதல்வராகவும், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சுக்விந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டு, மாநில முதல்வராக டிசம்பர் 11ந்தேதி பதவி ஏற்றார்.  துணை முதல்வராக முகேஷ் அக்னி ஹோத்ரி  பதவி ஏற்றார். முதலமைச்சரான சுக்விந்தர் சிங் பஸ் டிரைவரின் மகன் ஆவார். இமாச்சல பிரதேசம் நாதஷன் தொகுதியில் வெற்றி பெற்று 4வது முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ளார். 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தவர் மட்டும்  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்.

இவர் பதவி ஏற்றதும், மாநிலத்தின் அதிகரித்து வரும் சிமென்ட் விலை தொடர்பாகவும், அண்டை மாநிலங்களை விட ஹிமாச்சலில் சிமென்ட் விலை அதிகம் விற்பனை செய்ய காரணம் என்ன என்பது குறித்து தொழில் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சிமென்ட் விலை உயர்வு குறித்து, ஆய்வு நடத்தி, விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி  அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

முதல்வர் சுங்கவிந்தர் சிக்கின் உத்தரவு கடந்த 13ந்தேதி வெளியான நிலையில், அடுத்த நாளான 14ந்தேதி சிமென்ட் ஆலைகளை மூடுவதாக அதானி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது, பாஜக ஆதரவாளரான அதானி குழுமத்துக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து,  இமாச்சல பிரதேசத்தில் இரண்டு சிமென்ட் ஆலைகளை மூடுவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. அதற்கு காரணமாக,  அதிக போக்குவரத்து செலவை இருப்பதால், சிமென்ட் ஆலைகளை மேற்கொண்டு நடத்த சாத்தியமில்லை என தெரிவித்து உள்ளது.

அதானி குழுமத்து,  இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பர்மனா மற்றும் தர்லாகாட் என்ற பகுதிகளில் சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்த இரு சிமென்ட் ஆலைகளை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது,  ஆலைகள் மூடப்படுவதற்கு அதிக போக்குவரத்துச் செலவு காரணம் என்று ஆலை நிர்வாகம் கூறியிருந்தாலும், மலையகத்தில் சிமென்ட் மூடைகளின் விலையைக் குறைக்கக் கோரிய காங்கிரஸ் ஆட்சியுடன் இந்தப் பிரச்சினை இணைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் சிமென்ட்  உற்பத்தி நடந்தாலும், அம்மாநில மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இதனால், காங்கிரஸ் முதல்வர் பதவி ஏற்றதும்,  பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் விலையை குறைக்க வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக உள்ளார். அதைத் தொடர்ந்து அவர் எடுத்த நடவடிக்கை காரணமாகவே அதானி நிறுவனம் இரு சிமென்ட் ஆலைகளையும் மூடுவதாக அறிவித்து உள்ளது.

அதானி குழுமத்தின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கான திடீர் முடிவு, சிமென்ட் விலையைக் குறைக்கக் கோரும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பதிலடியாக இணைக்கப்பட்டு உள்ளது. சிமென்ட் விலையை குறைக்க அரசு கொடுத்த அழுத்தத்தைக் கண்டு அதானி குழுமம் இந்த திடீர் முடிவை எடுத்திருக்கலாம். இருப்பினும், சிமென்ட் நிறுவனங்களின் நிர்வாகம் அதிக சரக்குக் கட்டணத்தை மேற்கோள் காட்டியது, இதன் விளைவாக அதிக செயல்பாட்டு செலவுகள் சிமென்ட் ஆலைகளை மூட முடிவு செய்துள்ளன.

சிமென்ட் மற்றும் பிற மூலப்பொருட்களை கொண்டு செல்வதற்கான அதிக சரக்கு கட்டணங்கள் உற்பத்தியை சாத்தியமற்றதாக ஆக்குவதாக நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது. ஆலை நிர்வாகம், அடுத்த உத்தரவு வரும் வரை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பணிகளுக்குச் செல்ல வேண்டாம் என, ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

சிமென்ட் ஆலைகள் மூடப்படுவதால், இந்த ஆலைகளைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரம் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக வேலை வாய்ப்பையும் பாதிக்கும். இந்த சிமென்ட் ஆலைகளில் உள்ளூர் மக்கள் பணியாற்றுவது மட்டுமல்லாமல், பல லாரிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு, இந்த ஆலைகள் அமைந்துள்ள பகுதியின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன.

ஏற்கனவே கடந்த பாஜக ஆட்சியிலும் சிமென்ட் விலை குறைக்க மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், பாஜக அரசும் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தது. ஆனால், விலை குறைக்கப்படவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு எடுத்த நடவடிக்கை காரணமாக, பிரதமர் மோடியின் நண்பரான அதானி, தனது இரு சிமென்ட் ஆலைகளையும் மூடுவதாக அறிவித்து உள்ளார்.

அதானி பாஜக ஆளும் வேறு மாநிலங்களில் இந்த சிமென்ட் ஆலைகளை நிறுவதை நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  மோடியின் நண்பர் என்பதால், அவருக்க ஆதரவாக பாஜக ஆளும் மாநிலங்கள் இருப்பதால், அதானி, அmவருக்கு சாதகமான அரசாங்கங்கள் உள்ள பகுதிகளில் ஆலைகளை அமைக்க முன்வருவார் என கூறப்படுகிறது. ஏனென்னால், அவருக்கு விதிகளை மீறி பல்வேறு சலுகைகளை வழங்க பாஜக மாநில அரசுகள் தயாராக உள்ளது என்பதை மறுக்க முடியாது. அதனால், அவர் விதிகளை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்தாலும் கேட்க ஆளில்லாத சூழலே நிலவி வருகிறது.