டெல்லி: 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான தேதிகளை தேசிய தேர்வு வாரியமான நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பு மற்றும் ஐஐடி போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவு தேர்வுகள் குறித்த தேதிகளை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள B.E., B.Tech. போன்ற படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் JEE Main தேர்வு மற்றும் JEE Advanced தேர்வு என இரண்டு கட்ட தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஜேஇஇ முதல்கட்ட தேர்வு ஜனவரி 24ந்தேதியும், 2வது கட்ட தேர்வு ஏப்ரல் 6ந்தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு NEET 2023 தேர்வு தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளநிலை நீட் தேர்வு (UG Neet2022) மே 7ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு என்பது இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் மற்றும் பிற நர்சிங் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். தேசிய தேர்வு முகமை (NTA) NEET 2023 தேர்வை 7 மே 2023 அன்று நடைபெறும்என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS/BDS மற்றும் ஆயுஷ் திட்டத்தில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் NEET மதிப்பெண்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். AIIMS, JIPMER, AFMC போன்ற உயர்மட்ட மருத்துவ நிறுவனங்களிலும் சேர்க்கைகள் வழங்கப்படுகின்றன. இதுதொடர்பான விரைவான தகவல்கள் என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
JEE என்பது ஜாயின்ட்என்ட்ரன்ஸ் எக்சாம்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (CBSE) நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இந்த தேர்வானது நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள B.E., B.Tech. போன்ற படிப்பில் சேருவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு JEE Main தேர்வு மற்றும் JEE Advanced தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
JEE தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு சீட் அலாட் செய்யப்படுகிறது. NIT, IIIT போன்றவற்றில் சேருவதற்கு JEE Main தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் IITயில் சேருவதற்கு JEE Main தேர்வு மற்றும் JEE Advanced தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
JEE அட்வான்ஸ் தேர்வினை IIT மும்பை, IIT டெல்லி, IIT Guwahati, IIT கான்பூர், IIT கரக்பூர், IIT சென்னை, IIT ரூர்க்கி ஆகியவை கூட்டாக சேர்ந்து தேர்வினை நடத்துகிறது.
JEE Main தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுள் முதல் 1,50,000 இடங்களில் வரும் மாணவர்கள் மட்டுமே JEE Advanced தேர்வு எழுத முடியும்