காஞ்சிபுரம்: சென்னையின் 2வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அந்த பகுதியில் வசிக்கும் 13கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 3 மாதங்களை கடந்து போராடி வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு சர்வதேச டெண்டரை கோரி உள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் என தமிழகஅரசு உறுதியாக உள்ளது. இதையடுத்து, அந்த கிராமங்களில் உள்ள நிலங்கள், குளம் குட்டைகள், விவசாய நிலங்கள் போன்றவை கையகப்படுத்தும் பணிகளை தொடங்கி உள்ளன.
ஆனால், அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கருதி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 100 நாட்களை கடந்தும் நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழகஅரசு அவர்களை வெளியேற்றுவதில் மும்முரமாக உள்ளது.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. 4,970 ஏக்கர் பரப்பில் புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது. பரந்தூர் விமான நிலையத்துக்காக 13 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகர்களை வரவேற்று டிட்கோ விளம்பரம் செய்துள்ளது.
விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையேயான சாலை, ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். விமான நிலையங்கள் தொடர்பாக ஆய்வு வழங்கும் நிறுவனங்கள் ஜனவரி 6ம் தேதிக்குள் ஒப்பந்த புள்ளியை அனுப்ப வேண்டும். , 2069-70 ம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெறவேண்டும் எனவும் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.
ஆலோசனை நிறுவனங்களிடம் இருந்து வரும் ஒப்பந்தப்புள்ளிகள் ஜனவரி 6ம் தேதி திறக்கப்படும். 2669 – 70ம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.