டெல்லி: நாட்டின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, டெல்லி உள்ள சாந்தி வனத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மரியாதை செய்தனர்.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலவர் மல்லிகார்ஜூன கார்கே மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நவீன இந்தியாவை உருவாக்கியவர் பண்டிட் நேரு. அவரது வளர்ச்சிகர எண்ணங்கள், சவாலான சூழலிலும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைய வழிவகுத்தது. ஜனநாயகத்தின் சாம்பியன். உண்மையான தேசப்பற்றாளருக்கு எனது பணிவான அஞ்சலி என அவர் தெரிவித்து உள்ளார்.