பெங்களூரு: வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே .சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, வரும் ஏழாம் தேதி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி உள்ளது. வழக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் டி.கே.சிவகுமார். காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டியவர். இவர் தற்போது, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் பதவியில் இருந்தபோது, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாகவும், சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாகவும் அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள் டி. கே. சிவகுமாருக்கு சொந்தமான பெங்களூரு மற்றும் டெல்லி வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 81/2கோடி ரூபாய் சிக்கியது . இது குறித்து டி .கே .சிவகுமார், அவரது சகோதரர் டி. கே. சுரேஷ் எம்பி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். நீதிமன்றத்திலும் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்த விசாரணைக்காக கடந்த அக்டோபர் மாதம் நேரில் ஆஜராக வேண்டும் என்று டி. கே. சிவக்குமாருக்கு அமலாக்க துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் ராகுல் காந்தியின் கர்நாடக சுற்றுப்பயணத்தை காரணம் காட்டி அவகாசம் கேட்டிருந்தனர். கால அவகாசம் கேட்டும் அதிகாரிகள் அனுமதி வழங்காததால் சிவகுமாரும் பி. கே. சுரேஷ் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
இந்த நிலையில் வரும் ஏழாம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத்துறையினர் டி. கே. சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பி உள்ளார்கள். நேற்று காலையில் பெங்களூருவில் இருக்கும் அவரது வீட்டிற்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.