திருச்சி:
காவிரியாற்றில் இன்று புனித நீராடல், தீர்த்தவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் இன்று நடைபெற உள்ள துலாஸ்நானம், தீர்த்தவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார்.