சென்னை:
சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தீக்குளித்தவர் உயிரிழந்தார்.

சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த இளைஞர் வேல்முருகன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.