சென்னை: முதலமைச்சர் முன்னிலையில் சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அதன்படி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்ப பங்குதாரராக நியமித்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிப்காட் நிறுவனத்திற்கும் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகத்திற்கும் இடையேயும் மற்றும் சிப்காட் நிறுவனத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத் திற்கும் இடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பட்டது. அதன்படி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்ப பங்குதாரராக நியமித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தென்னரசு, சிப்காட் நிறுவனத்தின் 2021-2022ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையான 61.20 கோடி ரூபாய்க்கான வழங்கினார்.