டெல்லி: டெல்லியில் நடைபெற்ற மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில ஆம்ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சராக உள்ளவர், அதற்கு எதிராக செயல்பட்டதால், கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு தரப்பினர் புத்த மதத்திற்கு மாறுவதற்கான மதமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மதங்களைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புத்த மதத்திற்காக மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இதில், டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொண்டார். மேலும் சமுக ஆர்வலர்களும் அமைச்சரின் செயலை கடுமையாக விமர்சித்து வந்தனர். இது சர்ச்சையானது.
இதையடுத்து, அமைச்சர் கவுதமை பதவி நீக்கம் செய்யுமாறு பாஜகவினர் போர்க்கொடி தூக்கினர். இதனால், பாஜக ஆம்ஆத்மி இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதன் பாதிப்பு, வதோதராவில் நடைபெற்ற ஆம் ஆத்மியின் ‘திரங்கா பேரணி’யில் எதிரொலித்து.
இந்த நிலையில், டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசியவர், மகரிஷி வால்மீகிஜி யின் வெளிப்பாடு நாள் மற்றும் மான்யவர் கன்ஷி ராம் சாஹேப் அவர்களின் நினைவு நாள். அப்படியொரு நாளில் தற்செயலாக இன்று நான் பல தடைகளில் இருந்து விடுபட்டுள்ளேன். இன்று நான் மீண்டும் பிறந்துள்ளேன். இப்போது நான் இன்னும் உறுதியாக, சமூகத்தின் மீதான உரிமைகளுக்காக மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக எந்த தடையுமின்றி உறுதியாக தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்தார்.