ஸ்டாக்ஹோம்: 2022ம் ஆண்டு அமைதிக்கான  நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி உள்பட மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.  2022 பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான Civil Liberties மையம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று  2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.