சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில் சேர கால அவகாசம் அக்டோபர் 14வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவம் தொடர்பான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நேற்று எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில்,கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 12ந்தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்போது, விண்ணப்பிப்பதற்கான காலஅவகாச நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு (BVSc & AH / BTech) 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் கடந்த 12.09.2022 காலை 10.00 மணி முதல் 26.09.2022 மாலை 5.00 மணி வரை வரவேற்கப்பட்டன.
கால்நடை மருத்துவ (BVSc & AH) பட்டப்படிப்பு மற்றும் BTech பட்டப்படிப்புகளுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2022 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIS) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsorec) மற்றும் அயல்நாட்டினருக்கான (Foreign National) இடங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) 14.10.2022 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை (https://adm.tanuvas.ac.in) காணவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது