லண்டன்:
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
வின்ஸ்டர் கோட்டை வளாகத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் பிலிப் உடலும், இதே வளாகத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தியா சார்பில் இரங்கல் தெரிவிக்க லண்டன் சென்றுள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், லான்காஸ்டர் ஹவுசில் வைக்கப்பட்டு இருந்த புத்தகத்தில் இரங்கல் குறிப்பு எழுதினார்.