சென்னை:
குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சென்னை போலீசார் அதிரடியாக செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரில் குற்றச் செயல்களை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கிய உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்திருந்தார். அதன்படி, களத்தில் இறங்கிய போலீசார் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சிறப்பு தணிக்கைகளில் ஈடுபட்டனர். சென்னை பெருநகரில் உள்ள 491 லாட்ஜுகள், மேன்ஷன்கள் ஆகியவற்றில் சோதனை செய்தனர். அதில் பழைய குற்றவாளிகள் யாராவது இருக்கிறார்களா? என்று தேடினர். மேலும் சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா? என்றும் சோதனை செய்தனர்.
அங்கு தங்கியுள்ளவர்கள் மது அருந்தி பயணம் செய்தார்களா? உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என விசாரிக்கப்பட்டது. இறுதியில் 96 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. Face Recognition Software மூலம் 2,236 பேரிடம் குற்ற நபர்களா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என சென்னை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.