டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு என ராஷ்டிரபதி பவன் தகவல் வெளியிட்டு உள்ளது.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19ந்தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார். 3 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள குடியரசுதலைவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறத.

96-வது   இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம்  கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல்,  பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று முதல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப் பட்டுள்ளது. மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ராணியின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில்  ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்களில் பங்கேற்க உலக தலைவர்கள் இங்கிலாந்து செல்கின்றனர்.  இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார்.