சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடக்கிறது.
ஏற்கனவே 2 முறை சோதனை நடந்த நிலையில், 3வது முறையாக வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார் தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.