சென்னை: சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
சென்னை தரமணியில் 15.25 ஏக்கா் நிலப்பரப்பில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலை உணா்வுகளை பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தில் பல தரப்பட்டத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும், மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே முக்கிய இலக்கு ஆகும்.
தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுவரை தலைவர் பணியிடம் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் தலைவா் என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிகளை செம்மையாகத் தொடா்ந்து நடத்திட அதன் தலைவராக நடிகா் ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.