டெல்லி: கெஜ்ரிவால் அரசு கொண்டுவந்த புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக கெஜ்ரிவால் அரசு அறிவித்தது. இதையடுத்து பழைய கலால் கொள்கையே செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள ஆம்ஆத்மி அரசு, இன்று (செப்டம்பர் 1ந்தேதி) முதல், அரசே மது விற்பனையை மேற்கொள்கிறது. இன்றுமுதல் சில்லறை மது விற்பனையில் தனியாா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி அரசு ஜூலை மாதம் பழைய கலால் கொள்கையை திரும்பப் பெற முடிவு செய்து. அரசு நடத்தும் கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. துணை முதல்வர் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வாக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் நடத்தின.
இதையடுத்து, புதிய கலால் கொள்கையை திரும்ப பெறுவதாக கெஜ்ரிவால் அறிவித்தார். இதையடுத்து, டெல்லி அரசு புதிய கலால் கொள்கை கைவிட்டு, பழைய கலால் கொள்கை மீண்டும் டெல்லியில் இன்றுமுதல் செயல்படுத்தி வருகிறது.
இதனால் தனியார் விற்பனையாளர்கள் மதுபானக் கடைகள் நேற்றுடன் மூடப்பட்டன. இனி டெல்லி அரசாங்கமே மதுவிற்பனையை மேற்கொள்ளும். மேலும் தனியார் மது விற்பனை கடைகள், அரசு மது விற்பனை நிலையங்களால் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டைப் போல டெல்லி மாநில அரசும் இனி நேரடியாக மது விற்பனையை செய்யும்.