சென்னை:
ராகுல் நடைபயணம் துவக்க விழாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைக்க, தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
‘இந்தியா எல்லாருக்குமான நாடு’ என்ற பிரசாரத்தை வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.பி., ராகுல், செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபயணத்தை துவக்குகிறார். இதற்கான துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.