நியூயார்க்: கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார். உலக மீடியாக்கள் கார்ல்சனை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிய நிலையில், அவரை தூக்கிசாப்பிட்டு, தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றிருப்பது உலக மீடியாக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் கிரிப்டோ கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடர் செஸ் போட்டிகளில் முக்கியமான ஒரு தொடர் ஆகும். சர்வதேச அளவில் ரேங்கை உயர்த்திக்கொள்ள இது முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த தொடரின் சாம்பியனாக உலக செஸ் வீரர் கார்ல்சன் இருந்து வருகிறார்
இந்த தொடரில் இந்திய அணியும் பங்குகொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடுவீரர், 17வயதேயான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவும் இடம்பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே போட்டி நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு ன்று போட்டிக்கு முன் கார்ல்சனை பார்க்க ஏகப்பட்ட செய்தியாளர்கள் காத்து இருந்தனர். அவர்கள் அங்கு வந்த கார்ல்சனை மட்டுமே கொண்டாடிய நிலையில், அருகே உள்ள காரிடாரில் அப்பாவி போல் நின்றுகொண்டிருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை கண்டுகொள்ளவில்லை.
ஆனால், பிரக்ஞானந்தா அதை கண்டுகொள்ளாமல், தன்னுடைய பயிற்சியாளருடன் பிரக்ஞானந்தா பேசிக்கொண்டு இருந்தார். எப்போதும் போல எந்தவித ஆசா பாசங்களுக்கும் இடம்கொடுக்காமல் மனதை அமைதியா கவைத்துக்கொண்டு, போட்டியில் கார்ல்சனை எதிர்கொண்டார்.
கார்ல்சன் மிக எளிதாக, பிரக்ஞானந்தாவை வீழ்த்தி சாம்பியவன் ஆவார் என மீடியாகக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், பிரக்ஞானந்தாவின் அதிரடி ஆட்டத்தைக் கண்டதும் திகைத்துபோயினர். இறுதில், உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். அப்போதுதான் உலக மீடியாக்கள், யார் இந்த சிறுவன், எங்கிருந்து வந்துள்ளார் என்பது குறித்து அறியத் தொடங்கின.
எந்த மீடியா தன்னை கவனிக்கவில்லையோ அதே மீடியா முன் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார். தன்னை யாரும் கண்டுகொள்ளாத போதும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரக்ஞானந்தா ஆடி வென்ற விதம் பலரையும் கவர்ந்தது. இந்த கோப்பைக்கான போட்டியில் பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியர் மேக்னஸ் கார்ல்சனை 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.