சென்னை:
மிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இன்று துவங்க உள்ளது.

இதுகுறித்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு பிரிவில் மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினரில், அரசு பள்ளிகளில் படித்து, 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை, பத்து மணி முதல், மாலை, ஐந்து மணிக்குள் விருப்ப கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு பட்டியலை பதிவு செய்ய வேண்டும் என்றும், இன்று இரவு ஏழு மணிக்கு, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ‘ஆன்லைனில்’ வெளியாகும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கல்லுாரி தங்களுக்கு பிடித்திருந்தால், நாளை காலை பத்து மணிக்குள், ஆன்லைனில் உறுதி செய்ய வேண்டும் என்றும் உறுதி செய்தவர்களுக்கு மட்டும், நாளை மதியம் பன்னிரெண்டு மணிக்கு, கல்லுாரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.