சென்னை: கடல் அலையில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை நேரில் சென்று டிஜிபி. சைலேந்திர பாபு நலம் விசாரித்தார்.
வார விடுமுறையின் சென்னை கடற்கரைக்கு சென்னை மக்கள் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரையில் வந்து விளையாடியும், அங்குள்ள உணவு கடைகளில் உணவருந்தியும் மகிழ்வார்கள். இந்தநிலையில், கடந்த ஞாயிறன்ற, சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அப்போது திடீரென ஏற்பட்ட பெரிய அலை வந்ததில் சிறுவன் கடல் அலையில் சிக்கிக்கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் அந்த பையனை மீட்க, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த, டிஜிபி சைலேந்திர பாபு அந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தார். பிறகு அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிபி சைலேந்திர பாபுவின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை, டிஜிபி நேரில் சென்று நலம் விசாரித்தார்.