மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 50 காசுகள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். ரெப்போ வட்டி உயர்த்தப்படுவது கடந்த 2 மாதங்களில் இது 3வது முறையா. இதனால், நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும்போது வசூலிக்கும் வட்டி மேலும் ஒரு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தி யுள்ளதால், ஏனைய வங்கிகளும் தாங்கள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி கொள்கை முடிவுகளை வெளியிட்டுப் பேசினார். அப்போது, நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும் இந்திய ரிசர்வ் வங்கி இன்று (ஆகஸ்ட் 6) மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தப்படுவதாகவும்,. அதன்படி, ரெப்போ (வட்டி) விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) 5.4 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பானது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார்.
ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கும் பட்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்புகளை உறுதி செய்து வருவதாக தெரிவித்தவர், உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகப்பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச அளவில் நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதற்கு பெரும்பகுதி உக்ரைன் போர் காரணமாக இருக்கலாம். போரால் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
50 காசுகள் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் இது ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், இது பேரிடர் காலத்துக்கு முந்தைய சதவீதம் என்பதும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு மிக அதிகமாக வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது. இந்த ரெப்போ வட்டி உயர்வார், வீட்டு லோன் போன்றவைக்கான வட்டி விகிதங்களும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், இரும்புக் கம்பிகள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்றவற்றுடன் இணைந்து பெரிய சிக்கலை உருவாக்கக்கூடும். அண்மையில், இவையெல்லாம் சேர்ந்துதான் சொத்துக்களின் மதிப்பை கடுமையாக உயர்த்தியது. தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டியும், கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வும் இணைந்து சொத்து மதிப்பை அதிகரித்து, அது குடியிருப்புகளின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.