சென்னை

மிழக அரசு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் நாளை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.  இவற்றில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூன்) 22ம் தேதி முதல் தொடங்கியது.

அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு செய்யக் கடந்த மாதம் 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது.  ஆன்லைன் மூலம் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவானது. இவற்றில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்குக் கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிட உள்ளதாகக் கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாணவர் சேர்க்கை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற உள்ளது.