சென்னை:
சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச் சேரியில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் வானம் இன்று மேகமூட்டமாக காணப்படும். சில பகுதிகளில், மிதமான மழை பெய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.