கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, சம்பந்தப்பட்ட பள்ளியில் படித்த மாணவி உயிரிழந்த விவகாரத்தை மாநில குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிடப் பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற கலவரத்தில் டிஐஜி உள்ளிட்ட 52 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.