சென்னை: முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர்  சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்றால் முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சர் நாசருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில், சில நாட்களாக சளி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை அமிஞ்சிகரையில் உள்ள  எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். அவரை  மருத்துவக் குழுவினர்  கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.