சென்னை:
தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் தங்களது தொழிலை நேரடியாகவோ, வாரிசு தாரர் மூலமாகவோ மீண்டும் அமைக்கவோ அல்லது புதிய தொழில் தொடங்கவோ உதவிடும் வகையில் 25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.