சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை புகார் ஆணையம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கானது நேற்று முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் கோரிய சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் , உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக தமிழகத்தில் அமைக்கப்பட்ட “காவல் துறை புகார் ஆணையத்தை” சீரமைத்து நீதிபதிகளின் தலைமையில் இந்த ஆணையமானது அமைக்கப்பட வேண்டும் என்றுகோரி 2020-ல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழி காட்டுதலின்படி துணைத் தலைவர் மவுரியாவால், சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கானது நேற்று முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
நாம் கோரிய சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை புகார் ஆணைய மானது உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்படும் வரை மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.