புதுடெல்லி:
னாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வரும் 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது. அப்போது பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் என்றும் மற்றவர்கள் வழிமொழிவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.