சென்னை:
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இரவு பெய்த கன மழை காரணமாக வினாடிக்கு 775 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்குடபட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்படவுள்ளது.