புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்றும் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 4 நாட்களாக விசாரணை நடத்தினர்.
கடந்த 4 நாட்களில் இதுவரை 38 மணி நேரம் ராகுலிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.