சென்னை:
மிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், கோவை, சேலம், உட்பட 16 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.