கொழும்பு:
லங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மின்தட்டுப்பாடு நிலவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருட்களின் விலை உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறிகள், பழங்கள் , மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் மேலும் அதிகரித்து செல்வதால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனிடையே, இந்த சூழ்நிலையை கையாள முடியாமல் இலங்கை அரசும் தவித்து வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிப்பொருட்கள் நிலையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், எரிபொருள் பிரச்சனை மற்றும் மின்தட்டுப்பாடு உள்ளிட்ட அடுக்கடுக்கான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இலங்கையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைகள் மட்டும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபேல் பேல், கல்வி நிலையங்கள் மூடப்படுவதால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்து இயங்கும் வகையில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இணையதளம் மூலம் கற்பிக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.