சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த டாடா நிறுவனத்துடன் தமிழக  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாட்டில் உள்ள  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த புனே டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.2,877.43 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு நவீன திறன் பயிற்சிகளை மாணவர்ளுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு தரம் உயர்த்தப்பட உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. இதன்படி தொழிற்பயிற்சி நிலையங்கள், முன்னனி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சுமார் ரூ.2,877 கோடி செலவில் தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலம் ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்ட் வெல்டிங் உள்ளிட்ட நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.