ண்டிபட்டி

கூலித் தொழிலாளியின் மகன் தட்டச்சு முதுநிலைத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு தேனி மாவட்டத்திலும் 4 மையங்களில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இந்த தேர்வுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியானது.  ஆண்டிபட்டி தனியார் தட்டச்சு பள்ளியில் படித்துத் தேர்வு எழுதிய சரவண புவனேஷ் (15) என்ற மாணவர், முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சரவண புவனேஷ் 10ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருடைய தந்தை கூலித் தொழிலாளி ஆவார். சரவண புவனேஷ் சிறுவயது முதலே தட்டச்சு படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் 13 வயதிலேயே இளநிலை ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு முடித்துள்ளார்.

இவர் மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்காகத் தட்டச்சு பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி உள்ளனர்.