சென்னை:
அரசு பள்ளிகளில் மாணவச் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தாலும் இன்னும் சில பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே உள்ளது. அத்துடன் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த கல்வியாண்டு வருகிற ஜூன் 13ம் தேதி அன்று 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவச் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துப்படும் என்று சென்னை, ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.