‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ திரைப்படங்களில் ‘ஜேக் ஸ்பேரோ’ என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்க நடிகர் ஜானி டெப்.

நடிகர் ஜானி டெப்

2015 ம் ஆண்டு சக நடிகை ஆம்பர் ஹேர்ட்டை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சில மாதங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து 2018 ம் ஆண்டு ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரை ஹாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகை ஆம்பர் ஹேர்ட்

பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் பற்றி அந்த கட்டுரையில் எழுதியிருந்தார், ஜானி டெப்பின் பெயரை குறிப்பிடாமல், அவர் தன்னை துன்புறுத்தியதாக எழுதியிருந்தார் ஆம்பர் ஹேர்ட்.

இதனால் பட வாய்ப்புகளை இழந்த ஜானி டெப், அதே ஆண்டு ஆம்பர் ஹெர்ட் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். ரூ. 380 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வெளியானது.

விசாரணையில் ஆம்பெர் ஹெர்ட் கூறியது அனைத்தும் பொய் என நிரூபனமானதை அடுத்து ஜானி டெப்புக்கு ரூபாய் 116 கோடி இழப்பீடு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜானி டெப், தான் இழந்த வாழ்க்கையை நீதிமன்றம் மீட்டு கொடுத்துள்ளது என்றும் தனது வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.