சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த   கூட்டத்தில் கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா குறித்து  ஆலோrனை நடைபெற்றது. மேலும்,-  திராவிட மாடல், திமுக ஓராண்டு சாதனை, திராவிட பயிற்சி பட்டறை உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றுகாலை 10 மணி அளவில்  தொடங்கியது. இந்த கூட்டத்தில்,  கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,   மதவாத நச்சு விதைகளை தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்திட வேண்டும்   என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது