சென்னை: கடந்த 25 நாட்களாக  மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்று விடைபெறுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வழக்கமாக தொங்கும் அக்னி நட்சத்திரம் வெயில், மே 4ம் தேதி  தொடங்கியது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் 25 நாட்கள் தனது வெப்ப அலைகளை வீசி மக்களை வெளியே நடமாட முடியாதவாறு பாதிப்பை ஏற்படுத்தும். நடப்பாண்டு, வங்கக்கடலில் உருவாகிய புயல் காரணமாக இடையில் ஒரு வாரம் வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இருந்தாலும், வேலூர் உள்பட பல  மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் மக்களை வாட்டி எடுத்தது.  குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 105 டிகிரியை தாண்டி பதிவாகி காணப்பட்டது.

இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது .  தமிழ்நாட்டின் தென்மாவட்ம் உள்பல பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. கோடை மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.  25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.