டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் 33 பேர் பலியானதுடன்,  2,158 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த  24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர் தொடர்பான தகவலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி நேற்று மேலும்  2,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,50,215 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும்   33 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டின் மொத்த உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,572 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2,158 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 42,609,335 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 16,308  பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை  1,93,13,41,918 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,39,466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.