சென்னை:
முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு டெல்லி புறப்பட விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் சிடி ரவி மற்றும் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பிரதமர் நிகழ்ச்சிக்கு ஆளுங்கட்சி காசு கொடுத்து ஆட்களை கூப்பிட்டு வந்துள்ளனர். முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய், முன்னுக்கு பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என்று முதல்வர் கூறுகிறார் என்று தெரிவித்தார்.