ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் அந்த பகுதி மீனவ பெண்கள் கடற்பாசி சேகரிப்பது வழக்கம். அதுபோல கடற்பாசி சேகரிக்க சென்ற இளம்பெண் ஒருவர் வீடு திரும்பான நிலையில், அந்த பெண் எரிந்த நிலையில் பினமாக கண்டெடக்கப்பட்டு உள்ளார். பெண்ணின் முகம் எரிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். இதையடுத்துஅங்கு விரைந்த காவல்துறையினர், இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த 45 வயது மதிக்கத்தக்க மீனவபெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரி கொலை செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும், இது தொடர்பாக அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6 வடமாநில இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும், உண்மையான குற்றவாளி யார் என்பது விரைவில் உறுதி செய்வோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.