சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் குற்றச்சாட்டு

Must read

சென்னை: தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடைபெற்றுள்ளதாக  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு. கொலை, கொள்ளை சம்பவங்களில் உரிய விசாரணை நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போதும் எதிரொலித்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களிடையே பேசி வந்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  `தி.மு.க ஆட்சிக்கு வந்தால், சட்ட ஒழுங்கு சீர்கெடும், கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், மக்கள் அமைதியாக வாழமுடியாது’ என எச்சரித்துவந்தார். அதுபோல, தற்போது தமிழ்நாட்டில்  சட்ட ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்துவதில் மொத்தமாக தி.மு.க அரசு கோட்டை விட்டுவிட்டதாகவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தமிழகத்தில் மிகக்குறுகிய காலத்தில், நிறைய குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. தமிழகத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்களின் இடையூறு காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆரம்பித்துள்ளது. இதனால் கம்பீரமான காவல்துறை தனது நிலையை இழந்து வருகிறது. மீண்டும் தமிழக காவல்துறை தனது கம்பீரத்தை திரும்பப் பெற வேண்டுமென்றால் ஆளுங்கட்சியான தி.மு.க அரசு தமிழகக் காவல்துறையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ள டிவிட்டில்,  சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளது; இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது என கூறியுள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு குறித்து,  கடந்த 21ந்தேதி ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல் துறையினரை பார்த்து சமூக விரோதிகள் அஞ்சுகிறார்கள் என்றால் அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கின்றது என்று பொருள். ஆனால், தற்போது தமிழகத்தில் இதற்கு முற்றிலும் நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது

 “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. நெருப்பு இல்லாம புகையாதே! ஸ்டாலினையே பார்த்த ரவீந்திரநாத்.. ஓ இதான் காரணமா? விசாரித்த இபிஎஸ் கேம்ப்! அமளிக் காடாக தமிழகம் திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழகம் அமளிக் காடாக மாறிவிடுகிறது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து போயிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும், அவற்றில் அண்மையில் நடந்தவற்றை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே காளிசெட்டிபட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கவுசல்யா என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவர்களை மிரட்டி பணத்தை பறித்ததோடு மட்டுமல்லாமல் அவரது மகள் கடத்திச் செல்லப்பட்டார். தொடர் கொலைகள் ராயப்பேட்டை போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் ராஜ் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது; பெண்கள் கேலி செய்யப்பட்டதை தட்டிக் கேட்ட, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்டது;

மயிலாப்பூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது; தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர் ராமராஜ் என்பவர் பூந்தொட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டது; கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சபரி கணேஷ் என்பவர் சென்னை விமான நிலைய கார் நிறுத்தக் கட்டடத்தில் மர்ம மரணம்; மக்கள் அச்சம் திருக்கோயிலூர் அருகே பள்ளி மாணவர் கோகுல் கீரனூர் பைபாஸ் சாலையில் கொலை; விழுப்புரம் சிறையில் விசாரணைக் கைதி மரணம்; மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னை ஷெனாய் நகரில் நடுரோட்டில் பட்டப் பகலில் ஆறுமுகம் என்கிற பைனான்சியர் வெட்டிப் படுகொலை; சென்னை ஆதம்பாக்கத்தில் நடுரோட்டில் மூதாட்டி கத்தியால் குத்தி படுகொலை; சென்னை முகப்பேரில் தியாகராஜன் என்பவரை திமுக பிரமுகர் கத்தியால் குத்தியது;

செய்யாறில் மாணவர்களிடையே கத்திக்குத்து; அதிகரிக்கும் படுகொலைகள் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த வட சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஒட்டுனர் தீபன் அடித்துக் கொலை; சென்னை ஆர்.கே. நகரில் போதை மாத்திரை விவகாரத்தில் இளைஞர் ராகுல் படுகொலை; பாடி மேம்பாலத்தின் கீழ் அய்யப்பன் என்கிற தொழிலாளி அடித்துக் கொலை; தென்காசியைச் சேர்ந்த நெல் வியாபாரி பட்டுராஜ் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஒரத்தியில் அடித்துக் கொலை;

என படுகொலைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்தேறி வருகின்றன. Ads by திமுகவினரின் அராஜகம் இது மட்டுமல்லாமல், சாதி மோதல்கள் ஆங்காங்கே அதிகரித்து வருவதாகவும், திமுகவினரின் அராஜகம் காரணமாக காவல் துறையினரும், அரசு ஊழியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், இதன் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்து வருவதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பாலியல் தொல்லைகள், கொள்ளைச் சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த நிலைமை நீடித்தால் சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விடும். எனவே, தமிழக முதல்வர் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தமிழ்நாட்டில் நடைபற்ற வன்முறை சம்பவங்களை பட்டியலிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article